தம்பீ டீ இன்னும் வரல.....
blog ஆரமிச்ச ஒடனே முதல் பதிவா ரொம்ப தமாசா எதாவது விஷயம் நடந்தா அத போடலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தன்.
தமிழ்நாடு அரசியல்ல இப்போதைக்கு காமெடி பண்ற characters எல்லாம் மேலவை தேர்தல்ல busya இருக்காங்களே.....என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் நம்ம ராஜபக் ஷே அருமையா ஒரு காமெடி பண்ணார்.
இலங்கையோட பொருளாதார வளர்ச்சி பத்தி FICCI -IIFA economic forum la (புரியாதவங்க பொருளாதார வல்லுனர்கள்னு படிச்சுகோங்க)பேசும் போது தான்இந்த ஜோக் அவரு அடிச்சாரு .
அதாவது இலங்கையோட போர் வெற்றிய பத்தி தான் எல்லாரும் பேசுறாங்களாம் பொரளாதார வளர்ச்சி பத்தி யாருமே பேசுறது இல்லையம்.பணவீக்கம்(inflation ) 24 % லேந்து 6 %க்கு கொரஞ்சிருகாம்.அப்புறம் ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடும் GDP 6 % வளந்து இருக்காம்
பணவீக்கம் எப்போ அதிகாமவும் ? ஒண்ணு மக்கள் கைல காசு அதிகாமா இருந்து வாங்க வேண்டிய பொருட்கள் ஓட எண்ணிக்கை அதே அளவுல இருந்தா (demand pull ) இல்லாட்டி.மக்கள் கைல இருக்குற காசு அதே அளவுல இருந்து வாங்க வேண்டிய சாமான் ஓட விலை அதிகமிருந்தா (cost push ) பணவீக்கம் ஏற்படும். ஆனா இங்க தான் மக்களும் இல்ல காசும் இல்லையே அப்புறம் எப்படி பணவீக்கம்இருக்கும்
அப்புறம் பொருளாதார வளர்சிக்கு வருவோம்.2001la இலங்கையோட கடன் மட்டும் 101 % of கடப்.International monetary புன்ட்(IMF ) கிட்ட அய்யா சாமி எதாவது குடுங்கன்னு காசு வாங்கி இருக்குற காசெல்லாம் ஆயுதம் வாங்கவே செலவு பண்ணி(சில புண்ணியவாங்க ஓசில குடுதாங்கன்றது வேற விஷயம்),அவசர அவசரமா 2002 ல போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவந்து ஒரு வழிய கரை ஏறுனாங்க.
இத கேக்கும் போது நம்ம பிரதமர் பணவீக்கம் பற்றி பேசும்போது பண்ற காமடி பெருசா இல்ல ராஜபக்சே பண்ற காமெடி பெருசான்னு தெர்ல.
இவளோ தெளிவா பேசுற ராஜபக்சேக்கு தான் இந்த வாரம் தம்பீ டீ இன்னும் வரல விருது
Labels: இலங்கை


2 Comments:
வாருங்கள் .....
வளர்க ....
தம்பீ,
இந்த வாரம் தம்பீ டீ எனக்கு இன்னும் வரல ..
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home