Tuesday, June 8, 2010

மதம்....

எந்த மதமும் உலகம் முழுவதும் பரவவில்லை என்று தருமி(Sam & Silas vs ஏசு & முகமது ) சொல்லிருந்தாரு (no religion is universal)அவரு உட்ட எடதுலெந்து ஆரமிக்கலாம்.மதம் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை கிடையாது.இத மொதல்லயே சொல்லிடுரது better.

no religion is universal but religion is universal.எல்லா சமுதாயத்திலும் மதம் என்று ஒன்று இருந்தது.ஆதிவாசி,மலைவாழ் குடியினர்,indus civilisation இப்படி எல்ல இடங்களிலும் மதம்,இறை வழிபாடு இருந்தன.கம்யூனிசம் பின்பற்றப்படும் நாடுகள் கடவுள் இல்லைனு சொன்னாகூட அரசாங்கம் மதம் செய்ய வெண்டிய வேலைகளை செய்து வந்தது.நாட்டை கடவுளாக மக்கள் போற்றினர்.

ஆக மதம் என்றால் இந்து,இஸ்லாம்,க்ரிஸ்துவம் இப்படி அழகாக பெயர் வைத்து கொண்டு வெளிபடையாக இல்லாவிட்டாலும் ஒரு மாதிரியாக இருக்கின்றது.மலைவாழ் குடியினர் totemism(உயிரினங்களை வழிபடுவது)பின்பற்றினர்.animism,animatism என்று அந்த கால மதங்களை வகைபடுத்தலாம்

Emile Durkheim இத தான் சொல்ல வராரு.சாவுர நாள் தெரிஞ்சு பொச்சுன வாழ்ர நாள் நரகம் ஆயிடும்னு superstar சொல்லுவாரே.மனிதனுக்கு மட்டும் நம்ம எப்ப இறப்போம்னு தெரிஞ்சா மதம்,கடவுள்னு எதுவுமே தேவை கிடையது.As long as there is uncertainity there will be religion.

கார்ல் மார்க்ஸ் மதம் மனிதனிடம் வேற்று உலகத்தை எதிர்ப்பார்த்து வாழும் தன்மை(other wordliness) உருவாக்குகின்றது என்கிறார்.உழைக்கும் வர்கத்தை பிரித்துவைக்க முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் ஒரு அயுதமே மதம்.மக்கள் மதத்தின் பெயரால் சண்டையிட்டு கொண்டால் முதலாளிகள் சந்தோஷமாக அவர்களை சுரண்டிக்கொண்டு இருக்கலாமல்லவா?நாமும் அவ்வாறு சண்டை போட்டுக்கொண்டு தானே இருக்கிறோம்?

விஞ்ஞானம் எல்லா கேள்விகளக்கும் பதில் அளித்தால் கூட மதம் மனிதனை விட்டு போகாது.ஏனென்றால் விஞ்ஞானம் நமது மூளைக்கு சோறு போடுகிறது,மதம் நம் மனதுக்கு சோறு போடுகிறது(Even if Science is able to answer all those unanswered,religion will never disappear.Because when science gives food to mind,religion gives food to heart)

Labels:

3 Comments:

At June 8, 2010 at 10:10 AM , Blogger தருமி said...

//மதம் மனிதனை விட்டு போகாது//
ரொம்ப ரொம்ப உண்மை.

 
At June 10, 2010 at 9:34 AM , Blogger அன்புடன் நான் said...

நல்ல பார்வை... பாராட்டுக்கள்.

 
At July 14, 2010 at 12:10 PM , Blogger School of Energy Sciences, MKU said...

மதம் மற்றும் கடவுள் எல்லாம் எப்போதும் எங்கும் உண்டு. நாத்திகர் கூட செய்யும் தொழிலே தெய்வம் என்பர். ஆக, ஏதோ ஒரு வடிவில் எங்கும் நிறைந்தவன் எங்கும் இருப்பான்.

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home