Friday, June 11, 2010

யாருப்பா அது கோபால்?

பேராண்மை படத்துல வில்லனா வர்ற ஹாலிவுட் ஹீரோவின் பெயர் அண்டெர்சன்.டைரக்டர் தெரிஞ்சு வச்சாரானு தெரில.20,000க்கும் அதிகமான மக்களின் மரணதுக்கு முக்கிய காரணம,தற்போது போபால் வாசிகளின் வில்லனின் பெயரும் அது தான்.

நம்மள மாதிரி பொதுஜனம் தான் இவர வில்லனா பாத்துட்டு இருக்கோம்.இந்திய அரசாங்கம் இவர எப்பிடி பாக்குதுனு தெரிஞ்சிக்க வெணாமா?ஏன்ன நம்ம தன அவங்களுக்கு ஒட்டு போட்டு ஜெய்க்கவச்சோம்?

1)1984ல விஷவாயு வெளியேறி பல்லாயிரகணக்கான மக்கள் இறந்த சில நாட்களிலே கைது செய்யப்பட்ட அண்டெர்சன் அவரோட ஆயா மேல சத்தியமா இந்தியாக்கு திரும்ப வந்து விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன், ஒரே ஒரு தடவ என்னொட புள்ள குட்டிங்கள பாத்துட்டு வந்துடுரேன் அப்பிடினு சொன்னத நம்பி அப்போ மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங்க் மாநில அரசாங்க விமானத்துல அவர ஏத்தி டாடா காட்டிடு வந்துருக்காரு.ஏன் சார் இவளோ நல்லவனா இருக்கீங்க?
2)சுப்ரீம் கோர்ட் சொன்ன அபராத தொகை $3 பில்லியன்ல 15% தொகை($470 மில்லியன்) மட்டுமே யூனியன் கார்பைட் கொடுத்தது.தலைக்கு 15,000 சொச்சம் வரும் இந்த தொகை பாதிக்கபட்டவங்களோட மருத்துவ செலவுக்கு கூட பத்தாது.அத நம்ம அரசு சந்தொஷமா வாங்கிகிட்டது ஏன்?
3)தொழிற்சாலை இருந்த இடத்த சுத்தபடுத்திய பிறகு தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருந்தாலும்.கழிவுகள் இருந்த இடத்தை அப்படியே உட்டுட்டு அப்பீட் ஆக அனுமதித்தது ஏன்?தொழிற்சாலை இருந்த இடத்தின் அருகில் வசிக்கும் மக்கள் அதனால் இன்னும் மாசுபட்ட குட்நீரை குடிக்கின்றனர்
4)தயாரிப்பு நிலையிலேயே தவறுதலாக வடிவமைக்கபட்டதால் தான் விபத்து நடந்தது என்று சி.பி.ஐ உறுதி செய்த பிறகும் அமெரிக்க கம்பெனி UCC(parent company of UCIL) மீது அரசு வழக்கு தொடராதது ஏன்?
5)பத்திரிக்கை நிருபர்கள்,green peace உறுப்பினர்களால் கண்டுபிடிக்க முடிந்த வாரன் அண்டெர்சனை சி.பி.ஐ ஆல் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?
6)சி.பி.ஐ அதிகாரிகள்,போபால் கலெக்டர் ஆகியோர் வெளியுறவுத்துறை அவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது என்று புகார் கூறிய பிறகும் அரசு அமைதி காப்பது ஏன்?
7)இவ்வளவு நடந்த பிறகும் அமெரிக்க அணுசக்தி நிறுவனங்கள் இங்கு அணுமின்நிலையம் அமைத்து போபாலில் நடந்தது போல் ஏதாவது நடந்தால் அவர்கள் மேல் வழக்கு தொடர வழிவகுக்கும் civil nuclear liability bill clause 17(b) ஐ யாரயோ காக்கா புடிக்க மசோதாவிலிருந்து அரசு எதற்காக தூக்க அவசரப்படுகிறது
8)அப்போ யூனியன் கார்பைட் என்ற பெயர் கொண்ட நிறுவனம் தான் இப்போது டவ் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தால் வாங்கபட்டிருக்கிறது.இந்நிறுவனம் இந்தியாவின் செயற்கை உரம் (fertilizer ) சந்தையில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.அதனால் தான் அரசாங்கம் பெரிதாகஎதுவும் செய்யாமல் அமைதி காக்கின்றதா?

இந்த கேள்விக்கு எல்லாம் அரசு வாய தொறந்து பதில் சொல்ர வரைக்கும்......யாருப்பா அது கோபால்?

Labels:

2 Comments:

At June 11, 2010 at 8:02 PM , Blogger வோட்டாண்டி said...

friends padathula vijayum suriyavum sendhu adipaangale..vadiveloda assistanta varuvare..avar dhaampa "kovaalu"

 
At March 15, 2016 at 3:50 AM , Blogger Unknown said...

In need of a mechanical? Fret no more! Our technicians provide reliable and professional mechanics at your convenience.
For further detail visit our locate please click here>>
Car Service
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home