Friday, June 25, 2010

வெற்றி

வகுப்பில் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு தவறாக பதில் சொன்ன பொழுது பின் சீட்டில் அமர்ந்து எள்ளி நகைத்த அந்த பெண்...
சரியான பதில் சொன்ன பொழுது எதாவது guidea பாத்து கடம் அடிச்சிடு வந்துருப்பான் என்று கமென்ட் அடித்த அந்த பெண்...
வகுப்பில் விளையாடி கொண்டிருந்த பொழுது ஆசிரியரிடம் போட்டு கொடுத்து நான் திட்டு வாங்குவதை குரூரமாக ரசித்த அந்த பெண்...
தேர்வில் காப்பி அடித்த போது போட்டு குடுத்து பெருமை தேடிகொண்ட அந்த பெண்....
நீ எந்த கையால் எழுதுர என்று என் கையெழுத்தை கிண்டலடித்த அந்த பெண்...
இவனெல்லாம் எப்பிடி ஸ்கூல் ஃபர்ஸ்ட் எடுத்தான்னு தெரியலை என்று நொந்து கொண்ட அந்த பெண்...
நீயெல்லாம் ஐ.யெ.ஸ் எக்ஸாம் எழுதபோரியா என்று நக்கலடித்த அந்த பெண்...

என் வெற்றிக்கு பின்னால் எத்தனை பெண்கள்....

Labels:

Friday, June 11, 2010

யாருப்பா அது கோபால்?

பேராண்மை படத்துல வில்லனா வர்ற ஹாலிவுட் ஹீரோவின் பெயர் அண்டெர்சன்.டைரக்டர் தெரிஞ்சு வச்சாரானு தெரில.20,000க்கும் அதிகமான மக்களின் மரணதுக்கு முக்கிய காரணம,தற்போது போபால் வாசிகளின் வில்லனின் பெயரும் அது தான்.

நம்மள மாதிரி பொதுஜனம் தான் இவர வில்லனா பாத்துட்டு இருக்கோம்.இந்திய அரசாங்கம் இவர எப்பிடி பாக்குதுனு தெரிஞ்சிக்க வெணாமா?ஏன்ன நம்ம தன அவங்களுக்கு ஒட்டு போட்டு ஜெய்க்கவச்சோம்?

1)1984ல விஷவாயு வெளியேறி பல்லாயிரகணக்கான மக்கள் இறந்த சில நாட்களிலே கைது செய்யப்பட்ட அண்டெர்சன் அவரோட ஆயா மேல சத்தியமா இந்தியாக்கு திரும்ப வந்து விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன், ஒரே ஒரு தடவ என்னொட புள்ள குட்டிங்கள பாத்துட்டு வந்துடுரேன் அப்பிடினு சொன்னத நம்பி அப்போ மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங்க் மாநில அரசாங்க விமானத்துல அவர ஏத்தி டாடா காட்டிடு வந்துருக்காரு.ஏன் சார் இவளோ நல்லவனா இருக்கீங்க?
2)சுப்ரீம் கோர்ட் சொன்ன அபராத தொகை $3 பில்லியன்ல 15% தொகை($470 மில்லியன்) மட்டுமே யூனியன் கார்பைட் கொடுத்தது.தலைக்கு 15,000 சொச்சம் வரும் இந்த தொகை பாதிக்கபட்டவங்களோட மருத்துவ செலவுக்கு கூட பத்தாது.அத நம்ம அரசு சந்தொஷமா வாங்கிகிட்டது ஏன்?
3)தொழிற்சாலை இருந்த இடத்த சுத்தபடுத்திய பிறகு தான் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருந்தாலும்.கழிவுகள் இருந்த இடத்தை அப்படியே உட்டுட்டு அப்பீட் ஆக அனுமதித்தது ஏன்?தொழிற்சாலை இருந்த இடத்தின் அருகில் வசிக்கும் மக்கள் அதனால் இன்னும் மாசுபட்ட குட்நீரை குடிக்கின்றனர்
4)தயாரிப்பு நிலையிலேயே தவறுதலாக வடிவமைக்கபட்டதால் தான் விபத்து நடந்தது என்று சி.பி.ஐ உறுதி செய்த பிறகும் அமெரிக்க கம்பெனி UCC(parent company of UCIL) மீது அரசு வழக்கு தொடராதது ஏன்?
5)பத்திரிக்கை நிருபர்கள்,green peace உறுப்பினர்களால் கண்டுபிடிக்க முடிந்த வாரன் அண்டெர்சனை சி.பி.ஐ ஆல் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?
6)சி.பி.ஐ அதிகாரிகள்,போபால் கலெக்டர் ஆகியோர் வெளியுறவுத்துறை அவர்களை வேலை செய்ய விடாமல் தடுத்தது என்று புகார் கூறிய பிறகும் அரசு அமைதி காப்பது ஏன்?
7)இவ்வளவு நடந்த பிறகும் அமெரிக்க அணுசக்தி நிறுவனங்கள் இங்கு அணுமின்நிலையம் அமைத்து போபாலில் நடந்தது போல் ஏதாவது நடந்தால் அவர்கள் மேல் வழக்கு தொடர வழிவகுக்கும் civil nuclear liability bill clause 17(b) ஐ யாரயோ காக்கா புடிக்க மசோதாவிலிருந்து அரசு எதற்காக தூக்க அவசரப்படுகிறது
8)அப்போ யூனியன் கார்பைட் என்ற பெயர் கொண்ட நிறுவனம் தான் இப்போது டவ் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தால் வாங்கபட்டிருக்கிறது.இந்நிறுவனம் இந்தியாவின் செயற்கை உரம் (fertilizer ) சந்தையில் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.அதனால் தான் அரசாங்கம் பெரிதாகஎதுவும் செய்யாமல் அமைதி காக்கின்றதா?

இந்த கேள்விக்கு எல்லாம் அரசு வாய தொறந்து பதில் சொல்ர வரைக்கும்......யாருப்பா அது கோபால்?

Labels:

Tuesday, June 8, 2010

மதம்....

எந்த மதமும் உலகம் முழுவதும் பரவவில்லை என்று தருமி(Sam & Silas vs ஏசு & முகமது ) சொல்லிருந்தாரு (no religion is universal)அவரு உட்ட எடதுலெந்து ஆரமிக்கலாம்.மதம் மீது எனக்கு பெரிதாக நம்பிக்கை கிடையாது.இத மொதல்லயே சொல்லிடுரது better.

no religion is universal but religion is universal.எல்லா சமுதாயத்திலும் மதம் என்று ஒன்று இருந்தது.ஆதிவாசி,மலைவாழ் குடியினர்,indus civilisation இப்படி எல்ல இடங்களிலும் மதம்,இறை வழிபாடு இருந்தன.கம்யூனிசம் பின்பற்றப்படும் நாடுகள் கடவுள் இல்லைனு சொன்னாகூட அரசாங்கம் மதம் செய்ய வெண்டிய வேலைகளை செய்து வந்தது.நாட்டை கடவுளாக மக்கள் போற்றினர்.

ஆக மதம் என்றால் இந்து,இஸ்லாம்,க்ரிஸ்துவம் இப்படி அழகாக பெயர் வைத்து கொண்டு வெளிபடையாக இல்லாவிட்டாலும் ஒரு மாதிரியாக இருக்கின்றது.மலைவாழ் குடியினர் totemism(உயிரினங்களை வழிபடுவது)பின்பற்றினர்.animism,animatism என்று அந்த கால மதங்களை வகைபடுத்தலாம்

Emile Durkheim இத தான் சொல்ல வராரு.சாவுர நாள் தெரிஞ்சு பொச்சுன வாழ்ர நாள் நரகம் ஆயிடும்னு superstar சொல்லுவாரே.மனிதனுக்கு மட்டும் நம்ம எப்ப இறப்போம்னு தெரிஞ்சா மதம்,கடவுள்னு எதுவுமே தேவை கிடையது.As long as there is uncertainity there will be religion.

கார்ல் மார்க்ஸ் மதம் மனிதனிடம் வேற்று உலகத்தை எதிர்ப்பார்த்து வாழும் தன்மை(other wordliness) உருவாக்குகின்றது என்கிறார்.உழைக்கும் வர்கத்தை பிரித்துவைக்க முதலாளி வர்க்கம் பயன்படுத்தும் ஒரு அயுதமே மதம்.மக்கள் மதத்தின் பெயரால் சண்டையிட்டு கொண்டால் முதலாளிகள் சந்தோஷமாக அவர்களை சுரண்டிக்கொண்டு இருக்கலாமல்லவா?நாமும் அவ்வாறு சண்டை போட்டுக்கொண்டு தானே இருக்கிறோம்?

விஞ்ஞானம் எல்லா கேள்விகளக்கும் பதில் அளித்தால் கூட மதம் மனிதனை விட்டு போகாது.ஏனென்றால் விஞ்ஞானம் நமது மூளைக்கு சோறு போடுகிறது,மதம் நம் மனதுக்கு சோறு போடுகிறது(Even if Science is able to answer all those unanswered,religion will never disappear.Because when science gives food to mind,religion gives food to heart)

Labels:

Monday, June 7, 2010

தம்பீ டீ இன்னும் வரல.....

blog ஆரமிச்ச ஒடனே முதல் பதிவா ரொம்ப தமாசா எதாவது விஷயம் நடந்தா அத போடலாம்னு வெயிட் பண்ணிட்டு இருந்தன்.
தமிழ்நாடு அரசியல்ல இப்போதைக்கு காமெடி பண்ற characters எல்லாம் மேலவை தேர்தல்ல busya இருக்காங்களே.....என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப தான் நம்ம ராஜபக் ஷே அருமையா ஒரு காமெடி பண்ணார்.
இலங்கையோட பொருளாதார வளர்ச்சி பத்தி FICCI -IIFA economic forum la (புரியாதவங்க பொருளாதார வல்லுனர்கள்னு படிச்சுகோங்க)பேசும் போது தான்இந்த ஜோக் அவரு அடிச்சாரு .

அதாவது இலங்கையோட போர் வெற்றிய பத்தி தான் எல்லாரும் பேசுறாங்களாம் பொரளாதார வளர்ச்சி பத்தி யாருமே பேசுறது இல்லையம்.பணவீக்கம்(inflation ) 24 % லேந்து 6 %க்கு கொரஞ்சிருகாம்.அப்புறம் ஒரு நாட்டின் உற்பத்தியை கணக்கிடும் GDP 6 % வளந்து இருக்காம்

பணவீக்கம் எப்போ அதிகாமவும் ? ஒண்ணு மக்கள் கைல காசு அதிகாமா இருந்து வாங்க வேண்டிய பொருட்கள் ஓட எண்ணிக்கை அதே அளவுல இருந்தா (demand pull ) இல்லாட்டி.மக்கள் கைல இருக்குற காசு அதே அளவுல இருந்து வாங்க வேண்டிய சாமான் ஓட விலை அதிகமிருந்தா (cost push ) பணவீக்கம் ஏற்படும். ஆனா இங்க தான் மக்களும் இல்ல காசும் இல்லையே அப்புறம் எப்படி பணவீக்கம்இருக்கும்

அப்புறம் பொருளாதார வளர்சிக்கு வருவோம்.2001la இலங்கையோட கடன் மட்டும் 101 % of கடப்.International monetary புன்ட்(IMF ) கிட்ட அய்யா சாமி எதாவது குடுங்கன்னு காசு வாங்கி இருக்குற காசெல்லாம் ஆயுதம் வாங்கவே செலவு பண்ணி(சில புண்ணியவாங்க ஓசில குடுதாங்கன்றது வேற விஷயம்),அவசர அவசரமா 2002 ல போர் நிறுத்த ஒப்பந்தம் கொண்டுவந்து ஒரு வழிய கரை ஏறுனாங்க.

இத கேக்கும் போது நம்ம பிரதமர் பணவீக்கம் பற்றி பேசும்போது பண்ற காமடி பெருசா இல்ல ராஜபக்சே பண்ற காமெடி பெருசான்னு தெர்ல.
இவளோ தெளிவா பேசுற ராஜபக்சேக்கு தான் இந்த வாரம் தம்பீ டீ இன்னும் வரல விருது

Labels: